சட்டசபையை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க. மகளிர் அணியினர் கைது


சட்டசபையை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க. மகளிர் அணியினர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2020 2:11 AM IST (Updated: 10 Nov 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்களை முடக்காமல் புதுவையில் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுவை சட்டசபையை முற்றுகையிடப் போவதாக பா.ஜ.க. மகளிர் அணியினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

புதுச்சேரி, 

மத்திய அரசின் திட்டங்களை முடக்காமல் புதுவையில் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுவை சட்டசபையை முற்றுகையிடப் போவதாக பா.ஜ.க. மகளிர் அணியினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இதற்காக காமராஜர் சிலை அருகே அவர்கள் கூடினார்கள்.

அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் லந்துகொண்டனர்.

ஊர்வலம் நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்தனர். இதனால் அங்கேயே அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சட்டசபையை முற்றுகையிட தயாரானார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story