தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அறிமுக கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. புதிய பொறுப்பாளர் ஆ.துரை அறிமுக கூட்டம் புளியங்குடியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புளியங்குடி,
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. புதிய பொறுப்பாளர் ஆ.துரை அறிமுக கூட்டம் புளியங்குடியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சேக் தாவூது முன்னிலை வகித்தார். மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் வசந்தம் சுப்பையா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, பேரூர் கழக செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 70 வயதிற்கு மேற்பட்ட தகுதி உள்ளவர்கள் 18-ந் தேதிக்குள் நகர, ஒன்றிய பேரூர் கழக செயலாளரிடம் விண்ணப்பிக்கும்படி மாவட்ட பொறுப்பாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story