தென்காசி மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் இன்று திறப்பு
தென்காசி மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் இன்று திறப்பு ரசிகர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க ஏற்பாடு.
தென்காசி,
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த சினிமா தியேட்டர்களை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்காசியில் ஒரு சினிமா தியேட்டர் மட்டும் இன்று திறக்கப்படுகிறது. இதில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளன.
நுழைவு வாசலில் சமூக இடைவெளிவிட்டு பொதுமக்கள் நிற்கும் வகையில் தரையில் வட்டங்கள் வரையப்பட்டு உள்ளன. தியேட்டரின் உட்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் மீண்டும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் கைகளை கழுவுவதற்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று சங்கரன்கோவில், சிவகிரி, கடையநல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறந்து செயல்பட உள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story