திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 112 பேருக்கு கொரோனா - 28 பேர் குணமடைந்தனர்


திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 112 பேருக்கு கொரோனா - 28 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 10 Nov 2020 10:15 AM IST (Updated: 10 Nov 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திருப்பூர்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு சான்று ஒரு நாள் பாதிப்பின் எண்ணிக்கையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு தமிழகத்தில் 5 ஆயிரத்தையே நெருங்கி வந்தது.

ஆனால் தற்போது சில வாரங்களாக தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 3 ஆயிரமாக குறைந்துள்ளது. இதற்கிடையே நேற்று மட்டும் தமிழகத்தில் 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 794-ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு நெருங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

இதுபோல் கொரோனா பலி எண்ணிக்கையும் அவ்வப்போது இருந்து வருகிறது. அதன்படி திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பலியானார். தற்போது மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 197-ஆக உயர்ந்துள்ளது. இதில் 41 பெண்கள் மற்றும் 156 ஆண்கள் அடங்குவர்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்கள் அனைவரையும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story