போனஸ் வழங்கக்கோரி பாரதீய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
திருவாரூரில் போனஸ் வழங்கக்கோரி பாரதீய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக பாரதீய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்பொருள் வாணிப கழக பாரதீய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிப கழக மாநில துணை பொதுச்செயலாளர் ராஜகோபால், மாநில பொருளாளர் பாலகுமாரன், டாஸ்மாக் மண்டல செயலாளர் புத்தர், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் கொரோனா காலத்தில் தங்களது உயிரை பற்றி கவலைப்படாமல் பணி புரிந்தனர். பொதுவினியோக திட்டப்பணிகளை 2 மடங்கு கூடுதலாக செய்த கிடங்கு பணியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள், நெல் கொள்முதல் பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் பணியாளர் என அனைவருக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டு;ம்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் 30 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கோபு, மாவட்ட பொருளாளர் ஜெயக்கணேஷ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல தலைவர் சுரேஷ்பாபு, மண்டல அமைப்பு செயலாளர் சவுந்தரபாண்டியன், கிளை செயலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story