திண்டிவனத்தில், கார் மோதி கொத்தனார் பலி - மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து


திண்டிவனத்தில், கார் மோதி கொத்தனார் பலி - மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து
x
தினத்தந்தி 11 Nov 2020 5:15 AM GMT (Updated: 11 Nov 2020 5:01 AM GMT)

திண்டிவனத்தில் கார் மோதி கொத்தனார் பலியானார். மனைவியுடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த விபத்து நடந்தது.

திண்டிவனம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நல்லூர் நேத்தாஜி நகரை சேர்ந்தவர் சந்திரன்(வயது 50). கொத்தனார். இவரது மனைவி குப்பு(40). இவர்கள் இருவரும் சென்னையில் வசித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சந்திரன் அவரது மனைவியுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சலவாதி-திருவண்ணாமலை சாலை சந்திப்பில் வந்தபோது, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த குப்புவை ரோஷணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story