தூத்துக்குடியில் தியேட்டர்கள் திறப்பு
தூத்துக்குடியில் நேற்று தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தூத்துக்குடி,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சினிமா தியேட்டர்கள் உள்பட மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சினிமா தியேட்டர்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. இதனால் நேற்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தூத்துக்குடியில் நேற்று காலையில் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் பார்வையாளர்கள் யாரும் வராததால் காட்சிகள் ஓடவில்லை. நேற்று மாலையில் சில தியேட்டர்களில் மட்டும் காட்சிகள் ஓடின. இதனை குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டும் அமர்ந்து படத்தை பார்த்தனர்.
தியேட்டர்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
வழிகாட்டு நெறிமுறைகள்
இதுகுறித்து பார்வையாளர் ஒருவர் கூறும் போது, எனக்கு தியேட்டர்களில் சினிமா பார்ப்பது மிகவும் பிடிக்கும். கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதே போன்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் தியேட்டர்களில் கடைபிடிக்கப்பட்டு உள்ளன என்றார்.
Related Tags :
Next Story