அரியாங்குப்பத்தில் ஸ்கூட்டர்கள் திருடிய மெக்கானிக் கைது கள்ளச்சாவி தயாரித்து கைவரிசை
அரியாங்குப்பத்தில் கள்ளச்சாவி தயாரித்து ஸ்கூட்டர்கள் திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். சம்பவத்தன்று இரவு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அந்த ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனசெல்வம், புருஷோத்தமன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், மாஸ் அருள்ராஜ், உதயகுமார், ராஜேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
மெக்கானிக் கைது
இந்தநிலையில் வெங்கடேசன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஸ்கூட்டரை நயினார் மண்டபம் மூகாம்பிகை வீதியை சேர்ந்த புரட்சி பாபு திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் வெங்கடேசன் சில நாட்களுக்கு முன்பு தனது ஸ்கூட்டரை அவரிடம் பழுதுநீக்கம் செய்து தரும்படி கொடுத்துள்ளார். அப்போது அந்த ஸ்கூட்டரை திருடும் நோக்கில் அதற்கு கள்ளச்சாவி தயாரித்து வைத்துக் கொண்டு அதன்பிறகு மொபட்டை திருடியது தெரியவந்தது. மேலும் ஒரு ஸ்கூட்டரை இதேபோல் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான புரட்சிபாபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story