தஞ்சை நீலகிரி ஊராட்சி பகுதியில், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் - ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்
தஞ்சை நீலகிரி ஊராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகத்தை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்.
பிள்ளையார்பட்டி,
தஞ்சை நீலகிரி ஊராட்சியை சேர்ந்த ரகுமான் நகர் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகத்தை கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின்படி தஞ்சை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கந்தசாமி தொடங்கி வைத்தார். “ தீபாவளியில் கூட்டம் கூடுவதை தவிர்ப்போம், கொரோனாவை ஒழித்திடுவோம்“ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், மீனாட்சிசுந்தரம், நீலகிரி ஊராட்சி தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த துண்டு பிரசுரத்தில், அனைவரும் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு பொருட்களை உண்ண வேண்டும். நோயின் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி ஊராட்சி துணைத்தலைவர் சிங்.சரவணன், ஊராட்சி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்பு கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பர பதாகைகள் பொது மக்கள் கூடும் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story