மன்னார்குடி-நீடாமங்கலம் இடையிலான மின்சார ரெயில்பாதை பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க தீவிரம்


மன்னார்குடி-நீடாமங்கலம் இடையிலான மின்சார ரெயில்பாதை பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க தீவிரம்
x
தினத்தந்தி 13 Nov 2020 3:30 AM IST (Updated: 13 Nov 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி-நீடாமங்கலம் இடையிலான மின்சார ரெயில்பாதை பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மன்னார்குடி,

நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வே பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி-காரைக்கால் இடையிலான ரெயில்வே பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்தது. இந்த பாதையில் மின்சார ரெயில் என்ஜின்கள் மூலம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து நீடாமங்கலம்-மன்னார்குடி வரையிலான 11 கிலோ மீட்டர் தூர ரெயில்வே பாதையை மின்மயமாக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் பகத் கி கோத்தி எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கமான அட்டவணை ரெயில்கள், போக்குவரத்து தொடங்கியவுடன் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் நீடாமங்கலம்-மன்னார்குடி இடையிலான ரெயில்வே பாதை மின் மயமாக்கும் பணிகளை இம்மாத(நவம்பர்) இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story