கடைகளில் முக கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாமல் கடைகளில் இருந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் குழந்தைவேல் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் விளந்தை, கவரப்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் முக கவசம் அணிந்துள்ளார்களா?, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது முக கவசம் அணியாமல் கடைகளில் இருந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்கள் என மொத்தம் 9 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.1,800 வசூல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், விழாக்காலங்களில் அதிக கும்பல் கூடுவதால் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றனர்.
மேலும் ஆண்டிமடம் கடைவீதியில் வெளியூரில் இருந்து வந்த பொதுமக்கள், தீபாவளியை முன்னிட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பணியாளர்கள் முக கவசம் அணியாதவர்களை அழைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து, முக கவசம் அணிவது குறித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒலிபெருக்கி மூலம் முக கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது சுகாதார ஆய்வாளர் உமாபதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story