கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை சாப்பிட வேண்டும் - கலெக்டர் அறிவுரை
கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்புசக்தி உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பேரையூர்,
டி. கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டார். சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் கிராம பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று கண்டறியும் சோதனை நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:- ஒவ்வொரு தனிமனிதனும் கொரோனா விழிப்புணர்வோடு தினசரி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள முதியோர்கள் மற்றும் சிறுவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.
தனி மனிதர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அதிகமாக நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றுடன் நோய் எதிர்ப்புசக்தி உணவுகளை சாப்பிட வேண்டும்.
இதனால் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். உடன் பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் செல்லத்துரை, தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தரராஜன், வட்டார மருத்துவர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story