திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 81 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார்.
திருப்பூர்,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில மாதங்களாக நாள் ஒன்றின் பாதிப்பு 5 ஆயிரமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு தற்போது 2 ஆயிரத்து 500 வரை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 65-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த 55 வயது ஆண் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 200-ஆக உள்ளது. இதில் 43 பெண்கள் அடங்குவர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story