ரூ.4 கோடியுடன் வேன் கடத்தல் போலீசார் தீவிர விசாரணை
பால்கரில் ரூ.4 கோடியுடன் வேன் கடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானே,
பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம். அருகே நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் பணம் எடுத்து செல்லும் வேன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வேனை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
இதில் ரூ.4 கோடிக்கு மேல் பணம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்தபோலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
டிரைவர் மாயம்
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் வேனை பணத்துடன் கடத்தி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அந்த வேனின் டிரைவரும் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அவரே வாகனத்தை கடத்தி சென்றிருப்பாரா? என்ற கோணத்திலும் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
Related Tags :
Next Story