கண்ணமங்கலம் அருகே கணவருடன் தகராறு; விஷம் குடித்து பெண் தற்கொலை


கண்ணமங்கலம் அருகே கணவருடன் தகராறு; விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 Nov 2020 5:00 AM IST (Updated: 15 Nov 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து பெண், தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் குடுமி குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது51). இவர் தனியார் பள்ளி பஸ் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி சாந்தி(46). இந்தநிலையில் நேற்று காலை ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏழுமலை சாந்தியை கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சாந்தி பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்து குடித்தார். 

இதில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சாந்தி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக ஏழுமலை கண்ணமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story