20 மாணவ-மாணவிகளுக்கு ரூ.29 லட்சம் ஊக்கத்தொகை: கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்


20 மாணவ-மாணவிகளுக்கு ரூ.29 லட்சம் ஊக்கத்தொகை: கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்
x
தினத்தந்தி 15 Nov 2020 2:01 AM IST (Updated: 15 Nov 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.29 லட்சத்திற்கான ஊக்கத்தொகையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

2018-2019-ம் ஆண்டிற்கான பள்ளிகள் கூட்டமைப்பு நடத்திய 64-வது தேசிய அளவிலான போட்டிகளில், முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, கல்வி ஆய்வாளர் ஜெயராமன், கால்பந்து பயிற்சியாளர் அப்துல்லா ஷா, டேக்வாண்டோ பயிற்றுனர் ராஜகோபால், ஹேண்ட்பால் பயிற்றுனர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், பஞ்சாப், மத்தியபிரதேசம், குஜராத், மணிப்பூர், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, நியூ டெல்லி ஆகிய இடங்களில், டேக்வாண்டோ, வாள் சண்டை, பூப்பந்து, வளைபந்து, கையுந்து பந்து, கோ-கோ, ரோப் ஸ்கிப்பிங் உள்ளிட்ட போட்டிகளில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் வெற்றி பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.29 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டன.

Next Story