மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் சொத்து மீண்டும் ஏலம்


மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் சொத்து மீண்டும் ஏலம்
x
தினத்தந்தி 15 Nov 2020 3:30 AM IST (Updated: 15 Nov 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் சொத்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1, 2-ந் தேதி மீண்டும் ஏலம் நடைபெறும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

மும்பை, 

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகளை மராட்டிய அரசு ஏலத்தில் விட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அவரது பூர்வீக வீடு உள்பட 6 சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டது. ரத்னகிரி மாவட்டம் லோதே கிராமத்தில் உள்ள அவரது இடத்தை மட்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏலத்தில் விடமுடியாமல் போனது. இந்தநிலையில் அந்த நிலம் மீண்டும் ஏலத்தில்விடப்பட உள்ளது.

இதேபோல தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இக்பால் மிர்ச்சிக்கு சொந்தமான மும்பை மேற்கு புறநகர் வீடும் ஏலத்தில் விடப்படப்பட உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1, 2-ந் தேதி நடைபெறும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story