தாராவியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது


தாராவியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 15 Nov 2020 9:43 AM IST (Updated: 15 Nov 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32 ஆக குறைந்துள்ளது.

மும்பை, 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று அங்கு புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிசைப்பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 615 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 3 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது தாராவியில் 32 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தாதர், மாகிமில் தலா 18 பேருக்கு வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த பகுதிகளில் முறையே 4 ஆயிரத்து 440, 4 ஆயிரத்து 179 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story