செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 145 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 145 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2020 3:00 AM IST (Updated: 15 Nov 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 145 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 590 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43 ஆயிரத்து 994 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 695 பேர் உயிரிழந்துள்ளனர். 901 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 97 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 ஆயிரத்து 823 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர். 974 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 640 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 29, 31, 51 வயது ஆண்கள், 23 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 610-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 669 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 411 உயிரிழந்துள்ளனர். 530 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story