விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 Nov 2020 12:15 PM IST (Updated: 15 Nov 2020 12:03 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14, 229 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 110 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 13, 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 273 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 200-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் மேலும் 18 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14, 247 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 10 ஆயிரத்து 474 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 10 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 106 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று 436 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 474-ல் இருந்து 10 ஆயிரத்து 486 ஆக உயர்ந்தது.

Next Story