அரியாங்குப்பம் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
அரியாங்குப்பம் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் கணபதி வழிபாட்டுடன் நேற்று காலை கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சீர் வளர் சீர் சிவஞான பாலய சாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜைக்கு பின் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்புகளை கட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சூரசம்ஹாரம்
விழாவில் வருகின்ற 19-ந் தேதி வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 20-ந் தேதி சூரசம்ஹாரமும், 21-ந் தேதி வள்ளி தெய்வானை, சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங் காவல் குழுவினர், கந்த சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் அரியாங்குப்பம் காக்காயந்தோட்டம், வீராம்பட்டினம், முருங்கப்பாக்கம், தேங்காய்திட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
Related Tags :
Next Story