கோவில்பட்டி அருகே சிறுமி தற்கொலை - தீபாவளிக்கு புத்தாடை எடுக்காததால் சோகமுடிவு


கோவில்பட்டி அருகே சிறுமி தற்கொலை - தீபாவளிக்கு புத்தாடை எடுக்காததால் சோகமுடிவு
x
தினத்தந்தி 16 Nov 2020 8:39 AM IST (Updated: 16 Nov 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே, தீபாவளிக்கு தந்தை புத்தாடை எடுத்து கொடுக்காததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே உள்ள கழுகாசலபுரம் கீழூரில் குடியிருப்பவர் குருசாமி (வயது 42). விவசாயி. இவருடைய மகள் அமுதா( 17). பிளஸ்-2 படித்துள்ளார்.

தீபாவளிக்கு தனக்கு புத்தாடை வாங்கி தரும்படி தந்தை குருசாமியிடம் அமுதா கேட்டாராம். அதற்கு வரும் பொங்கலுக்கு புத்தாடை எடுத்து தருவதாக குருசாமி பதிலளித்தார். தீபாவளிக்கு புத்தாடை கிடைக்காததால் அமுதா மனமுடைந்து காணப்பட்டாராம். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீபாவளிக்கு தந்தை புத்தாடை வாங்கிக் கொடுக்காததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story