தேனி மாவட்டத்தில் 10 லட்சத்து 93 ஆயிரம் வாக்காளர்கள் - வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் தேனி மாவட்டத்தில் 10 லட்சத்து 93 ஆயிரத்து 489 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தேனி,
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார். வரைவு பட்டியலை கலெக்டரிடம் இருந்து, பெரியகுளம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சிவசுப்பிரமணியன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) நிறைமதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
வரைவு பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 93 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 988 ஆண்கள், 5 லட்சத்து 55 ஆயிரத்து 329 பெண்கள், 172 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர் களை விட பெண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 341 பேர் அதிகம் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 659, பெண்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 149, மூன்றாம் பாலினம் 25 என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 833 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 225, பெண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 667, மூன்றாம் பாலினம் 98 என மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரத்து 990 வாக்காளர்கள் உள்ளனர்.
போடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 584, பெண்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 208, மூன்றாம் பாலினம் 18 என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 810 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 520, பெண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 305, மூன்றாம் பாலினம் 31 என மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள், நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக் களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் சரியான விவரங்களுடன் இடம் பெற்றுள்ளதா? என உறுதி செய்து கொள்ளலாம். அடுத்தமாதம் 15-ந்தேதி வரை சிறப்பு சுருக்கத்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 1-1-2021-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம். மேலும் வருகிற 21-ந்தேதி, 22-ந்தேதி மற்றும் அடுத்தமாதம் 12-ந்தேதி, 13-ந்தேதி ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்பாக உரிய படிவங் களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் ஆர்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story