சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாதனை
அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்ட சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சின்னாளபட்டி,
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரிசர்ச் இன்டெலிஜென்ஸ், சைடெக் ஸ்ட்ராட்டஜிஸ் ஆகியோர் இணைந்து உலக அளவில் சிறந்த பேராசிரியர்கள் பட்டியலை தேர்வு செய்தனர். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நடைபெற்ற இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உலக அளவில் சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 314 ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர் களில் திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தை சேர்ந்த 7 பேராசிரியர் கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்கள் பி.பாலசுப்பிரமணியம் (கணிதம்), ராமச்சந்திரன் (இயற்பியல்), கே.மாரிமுத்து (இயற்பியல்), சேதுராமன் (வேதியியல்), மீனாட்சி (வேதியியல்), ஆபிரகாம் ஜான் (வேதியியல்), ஜி.சிவராமன் (வேதியியல் துறை தற்காலிக விரிவுரையாளர்) ஆகியோர் ஆவர்.
தங்களது துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காக அவர்கள் இந்த சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இதன்மூலம் உலக அளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 2 சதவீத இடத்தை பிடித்து காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் களை, பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை, துணை வேந்தர் (பொறுப்பு) பி.சுப்புராஜ், பதிவாளர் சிவகுமார் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் கள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story