ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் வல்லக்கோட்டை எறையூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு


ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் வல்லக்கோட்டை எறையூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 6:24 AM IST (Updated: 18 Nov 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

எறையூர் பகுதியில் இருந்து வல்லக்கோட்டை பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எறையூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தேவனேரி ஏரி உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் எறையூர் பகுதியில் இருந்து வல்லக்கோட்டை பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் தேவனேரி ஏரி பகுதியில் கரைகள் பலமாக உள்ளனவா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story