சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Nov 2020 10:55 AM IST (Updated: 18 Nov 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே குடும்ப தகராறில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

சேந்தமங்கலம், 

சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 43). லாரி டிரைவர். இவருடைய மனைவி தனம் (35). நேற்று முன்தினம் சின்னதுரை குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

அதை பார்த்த தனம், கணவர் சின்னதுரையை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னதுரை அங்குள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று மரத்தில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் மரத்தில் பிணம் தொங்குவதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து சின்னதுரை குடும்பத்தினருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பதறியடித்து ஓடி சென்ற தனம் கணவர் உடலைப்பார்த்து கதறி அழுதார். இதன்பின்னர் சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரை உடலை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னதுரைக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குடும்ப தகராறில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story