மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா + "||" + Corona for 14 more in the district

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 97 ஆயிரத்து 838 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16,566 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

15 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 14 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட சுகாதார துறையினர் பாதிப்பு நிலவரத்தை முறையாக அறிவிக்கவில்லை. மாநிலப்பட்டியலில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வந்த போதிலும் மாவட்ட சுகாதார துறையினர் அதனை தெரிவிக்காத நிலையே நீடிக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட மக்கள் தெரிய முடியாத நிலையில் முன்னெச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. பொது இடங்களிலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனையும் கண்காணிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தன போக்கை கடைபிடித்தால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர், வணிகர் சங்க நிர்வாகிக்கு கொரோனா - மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி
திருச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர், வணிகர் சங்க நிர்வாகிக்கு கொரோனா உறுதியானது. மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.