அனுமதி சீட்டு இல்லாமல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 9 விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு


அனுமதி சீட்டு இல்லாமல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 9 விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Nov 2020 7:15 PM IST (Updated: 18 Nov 2020 7:03 PM IST)
t-max-icont-min-icon

அனுமதி சீட்டு இல்லாமல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 9 விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டைப்பட்டினம்,

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது மீன்வளத்துறையினரிடம் அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும்.

இந்நிலையில் சில விசைப்படகு மீனவர்கள் அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்குள் செல்வதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நேற்று மணமேல்குடி அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், மேற்பார்வையாளர்கள் செல்வேந்திரன், விஜயபாலன் ஆகியோர் கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 9 விசைப்படகுகள் அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க சென்றது தெரியவந்தது.

இதனால் 9 விசைப்படகு உரிமையாளர்கள் மீதும் மீன்வளத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story