சகாப்பூரில் சிறுத்தைப்புலி தாக்கி காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு


சகாப்பூரில் சிறுத்தைப்புலி தாக்கி காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு
x

சகாப்பூரில் சிறுத்தைப்புலி தாக்கியதில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தாள்.

தானே,

தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா கோதி கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி ஜெயா சவார். சிறுமி கடந்த 10-ந் தேதி தாயுடன் தண்ணீர் பிடிக்க சென்றாள். அப்போது அங்கு வந்த சிறுத்தைப்புலி சிறுமியை தாக்கியது. சிறுமியின் தாயும், உறவினரும் போராடி சிறுத்தைப்புலியிடம் இருந்து அவளை மீட்டனர்.

மேலும் சிறுத்தைப்புலி தாக்கியதில் காயமடைந்த சிறுமியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் சிறுமி மேல் சிகிச்சைக்காக நாசிக் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டாள். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிறுமி சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுத்தைப்புலி தாக்கியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் கோதி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story