குடும்ப உறவுகளை இணைக்க நாளை இரவு ஒரு மணிநேரம் செல்போனை அணைத்துவைப்போம் - பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்


குடும்ப உறவுகளை இணைக்க நாளை இரவு ஒரு மணிநேரம் செல்போனை அணைத்துவைப்போம் - பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Nov 2020 9:52 AM IST (Updated: 19 Nov 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப உறவுகளை இணைக்க நாளை இரவு செல்போனை ஒரு மணிநேரம் அணைத்து வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அனைவரும் குடும்ப உறுப்பினர்களின் இணைப்பு தரும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், ஒருவருடன் ஒருவர் நேரத்தை சிரிப்பது, விளையாடுவது, நடனமாடுவது மற்றும் கலந்துரையாடுவது போன்ற செயல்களில் செலவிடுவதற்கு தொலைக் காட்சி, லேப்டாப், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு உபகரணங்களை ஒரு மணிநேரம் அணைப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை குழந்தைகள் தினத்துடன் வந்ததால் மேற்கூறிய உறுதிமொழியை நாளை (வெள்ளிக்கிழமை) உலக குழந்தைகள் தினத்தன்று எடுத்துக்கொள்வோம்.

அன்றைய தினத்தில் துண்டிக்கப்பட்ட குடும்ப உறவுகளை மீண்டும் இணைக்க இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணிநேரம் மட்டும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சாதனங்களுடன் ஆன நமது உறவை துண்டிக்க உறுதி கொள்வோம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் இயக்குனர் ருத்ரகவுடு கூறியுள்ளார்.

Next Story