கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் - 30 பெண்கள் உள்பட 120 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட 30 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
போளூர்,
போளூர் அருகே கரைப்பூண்டியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆலை நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சர்க்கரை தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஆலை தொழிலாளர்களுக்கு 9 மாத ஊதியம் வழங்க வேண்டும். ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கேஷங்களை எழுப்பினர். அப்போது தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆலைக்குள் செல்ல முயன்ற போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து 30 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்து வெண்மணியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, நந்தினிதேவி, முத்துக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story