மாவட்ட செய்திகள்

நெல்லையில் நினைவு நாள்: வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + Memorial Day in Nellai: W.U.C. Political parties pay homage to the statue by wearing garlands

நெல்லையில் நினைவு நாள்: வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் நினைவு நாள்: வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் வ.உ.சி. நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லை, 

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. -ம.தி.மு.க.

தி.மு.க. சார்பில் விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு இருந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம் தலைமையில் நெல்லை டவுனில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் -பா.ஜ.க

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் மகராஜன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தே.மு.தி.க. நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் நாகராஜசோழன், மகேந்திரன், முத்துப்பாண்டி, யாபேஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மத்திய மாவட்ட த.மா.கா. தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் சக்சஸ் புன்னகை உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தென்னக மக்கள் இயக்கம்

தென்னக மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுவன தலைவர் கே.வி.அய்யப்ப கார்த்திக், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ.உ.சி. பெயர் சூட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் வ.உ.சி. இளைஞர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
2. தர்மபுரியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தர்மபுரியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3. மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
4. நெல்லையில் தியாகி இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5. அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா: கீழுர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மரியாதை
புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவையொட்டி கீழுர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.