மாவட்ட செய்திகள்

சுவரில் இருந்த துளையில் தலை சிக்கியதால் பரிதவித்த நாய் + "||" + In the hole in the wall Because the head is stuck The paralyzed dog

சுவரில் இருந்த துளையில் தலை சிக்கியதால் பரிதவித்த நாய்

சுவரில் இருந்த துளையில் தலை சிக்கியதால் பரிதவித்த நாய்
ஆவடி, சுவரில் இருந்த துளையில் தலை சிக்கிக்கொண்டதால், வெளியே எடுக்க முடியாமல் பரிதவிப்பதை கண்டார்.
ஆவடி, 

ஆவடி, ராஜீவ்காந்தி நகர், கார்டன் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 45). இவர், நேற்று காலை நாய் கத்தும் சத்தம்கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது எதிர்வீட்டின் சுற்றுச்சுவரில் தண்ணீர் வெளியேற போட்டு இருந்த சிறிய துளைக்குள் தெரு நாய் ஒன்றின் தலை சிக்கிக்கொண்டதால், வெளியே எடுக்க முடியாமல் பரிதவிப்பதை கண்டார்.

இதுபற்றி ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கடப்பாரையால் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் இடித்து தெரு நாயை உயிருடன் மீட்டனர்.