ஜோலார்பேட்டை அருகே, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்


ஜோலார்பேட்டை அருகே, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 20 Nov 2020 10:45 AM GMT (Updated: 20 Nov 2020 10:53 AM GMT)

ஜோலார்பேட்டை அருகே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமிற்கு சிறப்பு மருத்துவர் சுமதி தலைமை தாங்கினார்

ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பஸ் நிறுத்த பகுதியில் வட்டார பொது சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது. முகாமிற்கு சிறப்பு மருத்துவர் சுமதி தலைமை தாங்கினார். அரசு டாக்டர்கள் மீனாட்சி தேவி, சுமன், புகழேந்தி, முரளி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.பிரேம்குமார், என்.சங்கரன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

முக கவசத்தின் அவசியம் குறித்தும் கொரோனா தடுப்பு குறித்தும் காளி வேடம் அணிந்த ஒருவர் அந்த வழியாக வந்தவர்களுக்குவிழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். முக கவசம் அணியாமல் சென்ற தனியார் பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பாச்சல் ஊராட்சி செயலாளர் பெருமாள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story