மாவட்ட செய்திகள்

கரூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண் ஜோதிடரிடம் 2¾ பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு + "||" + 2¾ pound chain snatched from female astrologer who was walking in the afternoon in Karur - Police webmaster

கரூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண் ஜோதிடரிடம் 2¾ பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு

கரூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண் ஜோதிடரிடம் 2¾ பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
கரூரில் பட்டப்பகலில் நடந்து சென்று பெண் ஜோதிடரிடம் 2¾ பவுன்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,

கரூர் வையாபுரி நகர் பகுதியை சேர்ந்தவர் நவமணி (வயது 47). பெண் ஜோதிடர். இவர் நேற்று முன்தினம் காலை காந்திபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்தார். இந்தநிலையில், கண் இமைக்கும் நேரத்தில் நவமணி கழுத்தில் அணிந்து இருந்த 2¾ பவுன்சங்கிலியை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நவமணி திருடன்... திருடன்.. என சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் மர்மநபர் தங்கச்சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து நவமணி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, பெண் ஜோதிடரிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார். கரூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண் ஜோதிடரிடம் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.