மாவட்ட செய்திகள்

ரெயிலில் அறிமுகம் வினையில் முடிந்தது தாயிடம் இருந்து 4 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது - புனேயில் சம்பவம் + "||" + The introduction on the train ended in reaction 4 month old baby from mother Kidnapping woman arrested - Incident in Pune

ரெயிலில் அறிமுகம் வினையில் முடிந்தது தாயிடம் இருந்து 4 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது - புனேயில் சம்பவம்

ரெயிலில் அறிமுகம் வினையில் முடிந்தது தாயிடம் இருந்து 4 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது - புனேயில் சம்பவம்
புனேயில் 4 மாத பெண் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புனே, 

அகமது நகர் ராகட்டா பகுதியை சேர்ந்தவர் மஞ்சு மோரே (வயது22) . இவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று தனது கணவரிடம் சண்டை போட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்த மஞ்சு மோரே தனது குழந்தையுடன் சகோதரி வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக சத்தாரா செல்லும் ரெயிலில் ஏறி பயணம் செய்தார். அந்த ரெயிலில் அருணா பவார் (35) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. மேலும் மஞ்சு மோரே தனது கணவரிடம் ஏற்பட்ட சண்டையை அவரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் அருணா பவார் அவரை சமாதானப்படுத்தி ஹடப்சரில் தன்னுடன் இறங்கும்படி தெரிவித்தார்.

இதன்படி 2 பேரும் ஹடப்சரில் இறங்கியதும் உணவு வாங்கி தருவதாக கூறி ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அருணா பவார் குழந்தையை கையில் வைத்திருந்தார். திடீரென அவர் குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு மோரே சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் குழந்தையை கடத்தி சென்ற அருணா பவார் மஞ்சரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அருணா பவாரை பிடித்து கைது செய்தனர். கடத்தப்பட்ட 4 மாத குழந்தையை மீட்டு மஞ்சு மோரோவிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை