செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலி எண்ணிக்கை 700-ஐ தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலி எண்ணிக்கை 700-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 22 Nov 2020 3:15 AM IST (Updated: 22 Nov 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 116 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். இதுவரை பலி எண்ணிக்கை 700-ஐ தாண்டியது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 125 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது. 887 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 114 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 38 ஆயிரத்து 956 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 664 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 645 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 315 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர். 467 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story