மாவட்ட செய்திகள்

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு + "||" + Money at the point of the knife to the petrol station employee, cell phone flush

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு
சோழிங்கநல்லூரியில் பெட்ரோல் நிலைய ஊழியரிடம் கத்தி முனையில் பணம், செல்போனை பறித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சரத்பாபு (வயது 29). இவர் செம்மஞ்சேரியில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சோழிங்கநல்லூர் சென்ற அவர் அங்கிருந்து பெருங்களத்தூர் செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஷேர் ஆட்டோவில் வந்த 3 பேர் அவரிடம் எங்கு செல்கிறீர்கள். உங்களை அங்கு கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினர். சரத்பாபு ஆட்டோவில் ஏற மறுத்தார். ஆனால் அதில் வந்தவர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1500 மதிப்புள்ள வாட்ச், செல்போன், ரூ.750, ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை பறித்துக்கொண்டு கொஞ்சம் தொலைவு சென்று அவரை அடித்து ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து சரத்பாபு செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை