மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது + "||" + In Erode district Children going to school The census began

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஈரோடு, 

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 வயது முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் கல்வி கற்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பள்ளிக்கூடங்கள் செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு ஆண்டுதோறும் எடுக்கப்படுகிறது. அதில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை பள்ளிக்கூடங்களில் சேர்த்து படிக்க வைக்கவும் அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த கணக்கெடுக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளிக் கூடங்களுக்கு செல்லாதவர்களை கணக்கெடுக்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு பழைய பூந்துறைரோடு ஒடைபள்ளம் பகுதியில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார்கள். அவர்கள் வீடு, வீடாக சென்று 18 வயதுக்கு உள்பட்டவர்கள் உள்ளனரா? அவர்கள் எந்த பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கிறார்கள்? எந்த வகுப்பு படிக்கிறார்கள்? முறையாக பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்களா? போன்ற விவரங்களை சேகரித்தனர். இந்த பணி அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது மேலும் 108 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மேலும் 108 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. ஈரோடு மாவட்டத்தில் 125 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 84 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
4. ஈரோடு மாவட்டத்தில் 148 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 70 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.
5. ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறது.