சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
தி.மு.க. கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து ராமேசுவரத்தில் நேற்று தி.மு.க.வினர் முக்கிய சந்திப்பு பகுதியான திட்டக்குடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்,
தி.மு.க. கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து ராமேசுவரத்தில் நேற்று தி.மு.க.வினர் முக்கிய சந்திப்பு பகுதியான திட்டக்குடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வை சேர்ந்த நகர் செயலாளர் நாசர்கான், அவைத்தலைவர் சண்முகம் விவசாய அணி செயலாளர் சுந்தர்ராஜன், இளைஞரணி நிர்வாகி ஜெகதீஷ்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முத்துராமன், ராம்குமார், முன்னாள் கவுன்சிலர் நாகசாமி உள்பட 65 பேரை நகர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.முக்கிய சாலையில் அமர்ந்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன் தலைமையில் திருவாடானை ஓரியூர் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். தொண்டி பேரூராட்சி தி.மு.க. சார்பில் பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் இஸ்மத்நானா தலைமையில் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ஓடவயல் ராஜாராம், நகர் இளைஞர் அணிஅமைப்பாளர் தாஸ், பேரூர் தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம், காளிதாசன், ராஜேந்திரன், சேகர் ராமு தொண்டியப்பா மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப் பட்டனர். ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் பஸ்நிலையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மறியலில் நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் இன்பாரகு மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நகர் காவல்நிலைய போலீசார் மேற்கண்ட மறியலில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story