சோளிங்கரில் ரூ.97 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கிணறு, நீர்த்தேக்கத் தொட்டி
சோளிங்கரில் ரூ.97 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கிணறு, நீர்த்தேக்கத் தொட்டி கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு.
சோளிங்கர்,
சோளிங்கர் தேர்வுநிலை பேரூராட்சி மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.97 லட்சத்தில் சோளிங்கர் பெரிய ஏரியில் திறந்தவெளி கிணறு மற்றும் சோளிங்கர் அப்பங்காரன் குளம் பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
அமைத்து கொண்டபாளையம் பகுதியில் வார்டு எண் 8, 9 மற்றும் 10, 11 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஏ.ஆர.கிளாஸ்டன் புஷ்பராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சோளிங்கர் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது குறித்து செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது ஜி.சம்பத் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், சோளிங்கர் வட்டாட்சியர் ரேவதி, சோளிங்கர் பேரூராட்சி செயல் அலுவலர் செண்பகராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story