லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பரிதாப சாவு தாய், தந்தை படுகாயம்


லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பரிதாப சாவு  தாய், தந்தை படுகாயம்
x
தினத்தந்தி 23 Nov 2020 3:15 AM IST (Updated: 23 Nov 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலியானான். உடன் சென்ற அவனது தாய், தந்தை படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர்,

சென்னை படப்பையை சேர்ந்தவர் ஆனந்தஜோதி (வயது 38). இவர் மனைவி கனகதுர்கா (36), மகன் ரித்தீஷ் (8). ஆனந்தஜோதி குடும்பத்துடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த காவல்சேரி சாலையில் சென்றபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது மகன் ரித்தீஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனான்.

மேலும் விபத்தில், வாகனத்தை ஓட்டிச்சென்ற அவனது தந்தை ஆனந்த ஜோதி மற்றும் அவரது தாய் கனகதுர்கா ஆகியோர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இந்த விபத்தை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த இருவரையும் மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story