வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் கழுத்தை அறுத்துக்கொண்டு, தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் கழுத்தை அறுத்துக்கொண்டு, தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2020 9:30 PM GMT (Updated: 22 Nov 2020 10:47 PM GMT)

வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்தால் விரக்தி அடைந்த வாலிபர், தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டதுடன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர் 18-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23), ஏ.சி. மெக்கானிக். இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அவரிடம், “ஏன் வேலைக்கு செல்லவில்லை?” என கேட்டு அவரது தந்தை கண்டித்தார்.

இதனால் மனம் உடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கத்தியால் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டார். அத்துடன் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார்.

கழுத்தில் காயத்துடன், வெங்கடேசன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story