‘நிவர்’ புயல் எதிரொலி: புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்
‘நிவர்’ புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
புதுச்சேரி,
வங்கக் கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல் நாளை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி கடலோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் இன்று புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த புயலை எதிர்கொள்ள புதுச்சேரி மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதகவும், பொது மக்கள் அச்சமின்றி பாதுகாப்பான இடங்களில் இருக்கலாம் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story