‘நிவர்’ புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


‘நிவர்’ புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2020 2:02 PM IST (Updated: 24 Nov 2020 2:02 PM IST)
t-max-icont-min-icon

‘நிவர்’ புயலானது நாளை புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல் தீவிர புயலாக மாறி நாளை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று சுமார் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘நிவர்’ புயலானது நாளை புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் கரையை கடக்கும் போது சுமார் 120 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story