‘நிவர்’ புயல் எதிரொலி மணப்பாடு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
‘நிவர்’ புயல் எதிரொலியாக மணப்பாடு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் கடற்கரை பகுதியில் சிப்பி சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உடன்குடி,
வங்க கடலில் உருவாகி உள்ள ‘நிவர்‘ புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 300 படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மணப்பாடு அருகே கடற்கரை பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் கடல் சிப்பி சேகரிப்பார்கள். சிலர் கடற்கரையில் நண்டு வளர்க்கின்றனர். புயல் காரணமாக, அங்கு கடல் சிப்பி சேகரிக்கவும், நண்டு வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பணிகளில் யாரும் ஈடுபடவில்லை.
கட்டுப்பாடுகள்
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், ‘நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கடற்கரையில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றனர். புயல் கரையை கடக்கும் வரை யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. கடலில் குளிக்கக்கூடாது. கடற்கரையில் சிப்பிகள் சேகரிக்கக்கூடாது என்று கூறி கண்காணித்து வருகின்றனர். அதனால் புயல் கரையை கடந்த பிறகு தான் நாங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story