‘நிவர்’ புயலால் வெறிச்சோடிய கோட்டைப்பட்டினம், மணமேல்குடி மீன்பிடி துறைமுகங்கள்


‘நிவர்’ புயலால் வெறிச்சோடிய கோட்டைப்பட்டினம், மணமேல்குடி மீன்பிடி துறைமுகங்கள்
x
தினத்தந்தி 24 Nov 2020 10:00 PM GMT (Updated: 25 Nov 2020 3:29 AM GMT)

‘நிவர்’ புயலால் கோட்டைப்பட்டினம், மணமேல்குடி மீன்பிடி துறைமுகங்கள் வெறிச் சோடி காணப்பட்டது.

கோட்டைப்பட்டினம்,

வங்க கடலில் உருவாகி உள்ள ‘நிவர்’ புயல் இன்று (புதன்கிழமை) மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட் டங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம், கடலோர பகுதியில் புயல் முன் னெச்சரிக்கை நட வடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த முன் னெச்சரிக்கை ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட் டனர். மீன்வளத் துறையினர் சார்பாக இப் பகுதியில் உள்ள படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப் பட்டது. அதன் அடிப்படையில் புதுக்குடி, கோட்டைப்பட் டினம், அய்யம்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம், முத்துக் குடா ஆகிய பகுதிக ளில் உள்ள நாட்டுப்படகுகள் கடலுக்கு அருகே உள்ள ஆற்று பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் நாட்டுப்படகு இல்லாமலும், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது.

இதேபோல் கோட்டைப் பட்டினம் மற்றும் ஜெகதாப் பட்டினம் பகுதிகளில் உள்ள விசைப்படகுகள் பாதுகாப் பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மீன்பிடி துறை முகங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப் பட்டது. இந்த பகுதிகளில் கருவாடுக்காக உலர்த்தப்பட்ட மீன்களை அள்ளும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப் பட்டது.

மணமேல்குடி பாக்ஜல சந்தி கடல்பகுதி நேற்று காலை முதல் சீற்றத்துடன் காணப் பட்டது. கடலில் காற்று புயலாக வீசியது. கடல் அலையும் அதிகமாக காணப் பட்டது. மேலும் கடலில் காற்று அதிகமாக வீசியதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் மீனவர்கள் படகு களை இடைவெளிவிட்டு நிறுத்தி வைத்தனர். பொன் னகர் மீன்பிடி தளம் வெறிச் சோடி காணப்பட்டது.

Next Story