‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்,
வங்க கடலில் உருவாகியுள்ள ‘நிவர்‘ புயல் இன்று (புதன்கிழமை) கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய தாலுகாக்களில் நேற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட மூவாற்றுமுகம், வள்ளங்குழிவிளை, கிள்ளியூர் தாலுகாவில் முன்சிறை, தேங்காப்பட்டணம், விளவங்கோடு தாலுகாவில் களியல், அழக்கல் போன்ற கிராமங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர கட்டுபாட்டு அறையின் செயல்பாட்டினையும் பார்வையிட்டார். பின்னர், அங்கு இருந்த அலுவலர்களிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மண்டல அலுவலர்கள் அனிதா (விளவங்கோடு), மாதவன் (திருவட்டார்), சங்கரலிங்கம் (கிள்ளியூர்), தாசில்தார்கள் சுப்பிரமணியம் (பேரிடர் மேலாண்மை), அஜிதா (திருவட்டார்), புரந்தரதாஸ்(விளவங்கோடு), ராஜாசேகர் (கிள்ளியூர்) மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story