டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு - கொரோனா பரிசோதனை
டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
மும்பை,
டெல்லி, குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரித்து இருப்பதால், அந்த மாநிலங்களில் இருந்து மராட்டியத்திற்கு வரும் விமான, ரெயில் பயணிகள் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து இருக்க வேண்டும் என மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பயணிகள் கொரோனா சோதனை செய்த சான்றுடன் வருகிறார்களா என்பதை சோதனை செய்ய ரெயில் நிலையங்களில் ஊழியர்களை ஈடுபடுத்த வார்டு அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா சோதனை செய்யாமல் வரும் வெளிமாநில பயணிகளுக்கு நோய் தொற்று அறிகுறி இருந்தால், ஆண்டிஜன் முறையில் கொரோனா பரிசோதனை செய்யும் பணியையும் மாநகராட்சி தொடங்கி உள்ளது. தனியார் ஆய்வகங்களுடன் இணைந்து மாநகராட்சி இந்த சோதனையை செய்கிறது.
இதேபோல சோதனையில் பயணிகளுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால் மட்டுமே அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story