அரியலூர் மாவட்டத்தில், பலத்த மழைக்கு 3 கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு 3 கூரை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன.
அரியலூர்,
‘நிவர்‘ புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதே போல் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் போது நாகமங்கலம் இந்திரா நகரில் வசித்து வரும் ரோஸ்லி என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.
நேற்று பகலில் பெய்த பலத்த மழையின் போது ரெட்டிபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும், மாலையில் பெய்த மழையில் வைப்பூர் நடுத்தெருவை சேர்ந்த திலிப்குமாரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும் இடிந்து விழுந்தது.
எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களில் செல்ல முடியாமல் மழைநீர் தேங்கியிருந்தன.
அதனை தொடர்ந்து வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரத்தை வைத்து தூர்வாரி மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story